சனி, 12 அக்டோபர், 2013

ஒலி...சப்தம்... சவுண்ட் SOUND WAVES


ஒலி...சப்தம்... சவுண்ட் 

.....................................
ஒலியானது குரலாகவோ அல்லது இசை கருவியாகவோ மொத்தத்தில் 
ஒலி கொடுக்கும் சாதனம் எதுவாக இருந்தாலும் அது ஒலி மூலம் 
ஏற்படுத்தும் அதிர்வு அலைகளாக  நகருகின்றன அல்லது பரவுகின்றன
இந்த அதிர்வு அலைககள் காற்றில் வினாடிக்கு 335மீட்டர் வேகத்தில் 
பயணம் செய்கின்றது 
அதே போல் இந்த அதிர்வு அலைகளை தண்ணீரின் மீது பயன் படுத்தினால் 
வினாடிக்கு 1500மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்ன காரணம் ?

விடை ;
காற்றின் அடர்த்தி குறைவு இதனால் அதிர்வுஅலைகள் குறைந்த தூரமே 
வினடிக்கு 335மீட்டர் வேகத்தில் பரவுகின்றன தண்ணீரின் அடர்த்தி 
அதிகமாக இருப்பதால் அதில் அதிர்வுகள் ஏற்படுத்தும் போது வினாடிக்கு  
1500மீட்டர்வேகத்தில் பரவுகிறது 
நீங்கள் கேட்டு இருக்கலாம் ஒரு குளத்தில் நீங்கள் ஒரு கரையில் இருக்கும் போது 
மறு கரையில் இருப்பவர் துணி துவைப்பவர் துணியை கல்லின் மீது ஓங்கி அடிக்கும் 
போது உங்களுக்கு வினாடிகள்  வித்தியாசத்தில் இரண்டு முறை அந்த சப்தம் கேட்கும்
இது முறையே முதலில் கேட்கும் ஒலி நீரின் மூலமும் இரண்டாவது காற்றின் மூலம்   
பரவுவதாலும் அப்படி கேட்கிறது 

ஒலி அலைகள் மற்றும் மின்காந்த அலைகள் எப்படி பரவும் தெரியுமா ?
ஒரு அமைதியான குளத்தில் அசையாமல் நிற்கும் நீரில் ஒரு சிறு கல்லை 
நடுவில் எரிந்து பாருங்கள் அபொழுது அந்த தண்ணீர் ஒரே சீராக வட்ட வட்டமாக 
நகர்வதை காணலாம் அதே போல்தான் பரவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக