ஞாயிறு, 23 நவம்பர், 2014

மின்சார  தகவல் 
ELECTRIC INFO 


நிறுத்துங்க   நிறுத்துங்க எல்லாத்தையும் 
நிறுத்துங்க  அப்ப தான் கரண்ட் செலவு 
குறையும்  ஆம் நீங்க பயன் படுத்துற டிவி கள் ஆடியோ சாதனங்கள் கம்பியுடர்கள் போன்ற வகைகளுக்கு பயன் படுத்தும் ஸ்டெபிலைசர் ups
போன்ற மின் இணைப்பு கருவிகளை நீங்கள் பயன் படுத்தாத போது முற்றிலும் அனைத்து வையுங்கள் 
இன்வர்டரை கூட தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கும்போது அணைத்து வைக்கலாம் இதை பயன் படுத்தாத போது பட்டெரியில்   இரண்டு மூன்று நாட்களுக்கு மின் சேமிப்பு இருக்கும் மீண்டும் மின்சாரம் தடை பட்டால்  மட்டும் செயல் படுத்தலாம் 
அப்புறம் இவை இல்லாமல்  ஸ்டெபிலைசர் மூலம் டிவி களை(எந்த டிவியா இருந்தாலும்)ஸ்டான்ட்பை  மோடில் வைக்காதீர்கள் அப்படி வைத்தால் மின்விரயம் நிச்சயம் 

..மின்சார சாதனங்கள் பாதுகாப்பு ..

..மின்சாரத்தில் இரு வகை பிரச்சனைகள் ..
1 மிகை மின் அழுத்தம்.. 
2 குறைந்த மின் அழுத்தம் ..
1.மிகை மின்அழுத்தத்தில் இரண்டு வகைகள் 1(SPIKE)-2(surge)
ஒன்று (SPIKE)இது மின்னல் கீற்று போல் தோன்றி மறையும்  இதனால் மின்அணு சாதனங்களின் சர்கியுட் போர்ட்கள் உடனடியாக எரிந்து  பழுது ஏற்ப்படும்..  
;
இரண்டு (surge) இது மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களை மோட்டார் போன்றவைகள்  நிறுத்தும் போது மின்எழுச்சி ஏற்ப்படும்  இதை back emf என்று சொல்லல்லாம் emf என்றால் எலெக்ட்ரோ மோடிவ் போர்ஸ் ஆகும் இது மோட்டார் காயில்கள் மின்சாரத்தில் இயங்கும் போது காந்த புலங்களாக மாறி இருக்கும் இதை நிறுத்தும் பொழுது காயில்கள் அந்த காந்த புலங்களை விட்டு விடும் அது மிகை மின்சாரமாக் வெளியேற்ற படும் போது அந்த மின் சுற்றில் பயனில் இருக்கும் சிறுவகை மின்சார மற்றும் மின்அணு  சாதனங்களை தாக்கும் 
இதனால் சாதனங்கள் பழுது ஏற்பட்டோ எரிந்தோ சேதமடைந்து விடும் 
2.குறைந்த மின்அழுத்தம் 
குறைந்த மின் அழுத்தத்தில் எந்த விதமான சாதனங்களையும் பயன் படுத்த கூடாது இதில் பயன் படுத்தும் போது அந்த சாதனங்கள் சிறப்பாக இயங்காது 
இதனாலும் பழுதுகள் ஏற்ப்படும் இது விளக்குகளையும் குறைந்த அளவு பிரகாசத்தில் எரிய வைக்கும் வீட்டிற்கு வரும் மின்சாரத்தின் அளவு 
200வோல்ட்  முதல் 230 வோல்ட் வரை மின் துடிப்பு 50 Hz ஆகும் 
;
இந்த surge மற்றும் spike  குறைந்தமின் அழுத்தம் மிகை மின்அழுத்தம் இவைகள் எதனால் ஏற்படுகிறது 
என்றால் வீடிற்கு மின்சாரம் பகிரும் EBட்ரான்ஸ்பார்மர் ஆகும் அதே நேரத்தில் வீட்டிற்க்கு பங்கிட்டு கொடுத்து இருக்கும் அளவை விட அதிகமா மின்சாரத்தை பயன் படுத்துவது ஒரு ஐம்பது வீடுகள் இருக்கும் பகுதியில்  100 kilowatt ட்ரான்ஸ்பார்மர் போட்டு இருப்பார்கள் இதை அந்த ஐம்பது வீடுகளுக்கு 
பங்கிட்டு தரும் போது வீட்டிற்கு இரண்டு கிலோ வாட் 
மின்சாரம் கிடைக்கும் ஆனால் இந்த நவீன காலத்தில் 
இந்த இரண்டு கிலோ வாட் மின்சாரம் போதாது அந்த காலத்தில் பல்புகள் ரேடியோ நீர் இறைக்கும் motor கள் மட்டுமே பயனில் இருந்தது ஆனால் இன்று டிவி, காம்பியூட்டர், பிரிஜ் ,வாசிங்மெசின், ஏர்கண்டிசனர், வாட்டர்ஹீட்டர், மிக்சி, கிரைண்டர்,அனேக பொருட்களை பயன் படுத்துகிறோம் இந்த மாதிரி பொருட்கள் அதிக சக்தியில் மின் அழுத்தத்தில் இயங்க கூடியது இதனால் மின் ஏற்ற தாழ்வுகள் ஏற்ப்படும் இதை சரி செய்ய சிறந்த ஸ்டெபிலைசர் அந்த அந்த பொருட்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும் அல்லது surge,spike filter களைபயன் படுத்தலாம் 
அதே போல் மின்சார சாதனங்களை பயன் படுததாத 
போது எல்லாவற்றையும் அணைத்து வைக்கலாம் 
இன்றைய தொழில் நுட்பத்தில் வந்துள்ள LED விளக்குகளை பயன் படுத்தும்போது குறைந்த மின்சாரம் 
இருந்தால் போதும் இவைகள் நீண்டு உழைக்க கூடியது 
மின் சிலவும் குறையும் அதே போல் மழை காலங்களில் மின்னல் தோன்றும் அந்த நேரங்களில் அதிக விலை மதிப்புள்ள பொருட்களை மின் இணைப்பு போர்டுகளில் உள்ள plug களை அகற்றி வைக்க வேண்டும் 
''உங்க பொருள் உங்க பாதுகாப்பு '' வசதியா இருக்குறவங்க அப்படியே விட்டு கூட வச்சுக்கலாம் சொல்லுறதை சொல்லி புட்டேன்  
அப்புறம் plugக கலட்டுறேன்னு சொல்லி வயர பிடிச்சு இழுக்காதீங்க அப்படி இழுத்தா வயரின் உள்ளே கம்பிகள் அறுபடும் அப்புறம் அப்படி உள்ள அறுபடும் கம்பி வெளிய தெரியாது திரும்பவும் நீங்க மாட்டும் போது பொருள் வேலை செய்யாது அப்பறம் கன்னத்தில் கை வச்சுட்டு உக்காரனும் அப்புறம் என்னை கூப்பிடுவீங்க பத்து பைசா பெறாத வேலைக்கு நான் வந்து சரி பண்ணீட்டு ஐநூறு ரூப பில் போட்டு பெட்ரோல் காசு வாங்கிட்டு வந்துடுவேன் ஹி ஹி ஹிஹி ஹிஹி 
எப்புடி ....பத்து பைசா பெறாத வேலைக்கு ஐநூறு ரூபாயா உங்க mind வாய்ஸ் கேட்குது  ம்ம்ம்ம் அது வேலைக்கு இல்ல வந்து அதை சும்மா சரி பண்ணிட்டு ஒரு லெக்சர் குடுப்பேன் பாருங்க நீங்க எபேர்பட்ட எஞ்சினீயாரா இருந்தாலும் ஆடி போய்டுவீங்க (ஏன்னா பாதிக்க பட்ட பொருள் எல்லா விசயதையும் எங்கிட்ட சொல்லிடும் ) அதுக்கான பீஸ் தான் 
எனவே நண்பர்களே  நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்  
ஆசிரியர் 
லி.பூபதிராஜ் ....காரைக்குடி 
22 11 2014.
MAHA HI-TECH (india)
  ELECTRONICS
   KARAIKKUDI