ஸ்பீக்கர்
ஸ்பீக்கர்....ஒலிப்பான்
உலகில் இன்று எத்தனையோ டிஜிட்டல் சாதனங்கள்
வந்து இருந்தாலும் அவைகளில் இருந்து கிடைக்கும் ஓசை
மற்றும் இசையை நம் காதுகளுக்கு துல்லியமாக கொண்டுவந்து
சேர்க்கும் ஒரே கருவி ஸ்பீக்கர் ஆகும் ஒலி வேகத்தை பார்த்தோம்
குறைந்த தூரம் மட்டுமே கேட்க்கும் ஒலியை நாம் நீண்ட தூரங்களுக்கு
கொண்டு சென்று அனைவரும கேட்பதற்கு இந்த ஸ்பீக்கர் பயன் படுகிறது
மின்சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் மக்கள் கூடுமிடங்களில்
செய்திகளை சொல்ல ஒரு கூம்பு வடிவ தகரத்தால் செய்ய பட்ட புனல்
போன்ற சாதனம் பயன்பட்டது இதை மெகாபோன என்று அழைத்தனர்
மின்னியல் சாதனங்களும் மின்சாரம் பாட்டெரி போன்ற சாதனங்கள் வந்த
பிறகு மின்னியல் சாதனங்கள் மூலம் அமப்ளிபியர் உருவாக்கப்பட்ட பின்
ஒலியை நீண்ட தூரங்களுக்கு வயர்`மூலம் கொண்டு சென்று ஸ்பீக்கர்
மூலம் கேட்க்க முடிந்தது அதே போல் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தி
மெகாபோனகள் உருவாககினார்கள்
ஸ்பீக்கரின் அளவு ஒரு நாலணா அளவு முதல்18 இன்ச் சுற்றளவு வரை உள்ளது
இதன் சக்தி (watts) 300 மில்லிவாட் முதல் ஆயிரம் வாட்ஸ்கள் வரை உள்ளது
:
ஸ்பீக்கர் இயங்கும் முறை மற்றும் அதன் பகுதிகள்:
ஸ்பீக்கர் இயங்க முக்கியமான பொருள் 1 காந்தம் (மாக்னட்) 2வாய்ஸ்காயில் இது
பேப்பர் மீது மிகவும் மெல்லிய செம்பு கம்பியை கொண்டு சுற்ற பட்டு இருக்கும்
முதலில் காந்தம் பற்றிய சிறு குறிப்பு காந்தங்களில் இருதுருவம் உண்டு ஒன்று
வட துருவம் ஒன்று தென் துருவம் ஆகும் இதில் ஒரே மாதிரி உள்ள இரண்டு
காந்தங்களை எடுத்து ஒரு காந்தத்தின் வட துருவத்தையும் இன்னொரு காந்தத்தின்
தென் துருவத்தையும் நேராக காட்டினால் இரண்டும் ஒன்றாக ஒட்டி கொள்ளும்
அதே போல் வடதுருவத்தையும் வடதுருவத்தையும் நேராக காட்டினால் இரண்டும்
ஒன்றை ஒன்று தள்ளும் இதனை (ஒன்று பட்ட சார்ஜ்கள் ஒன்றை ஒன்று தள்ளும்
இரு வேறுபட்ட சார்ஜ்கள் ஒன்றைஒன்று இழுக்கும்)என்பார்கள் இதனை ஆங்கிலத்தில்
(like charges ripple each other un like charges atract each other )
என்பார்கள் அந்த விதிதான் ஸ்பீக்கர்களில் பயன்படுகிறது
காந்தங்களில் மூன்று வகை உண்டு 1 பெர்மனென்ட் மாக்னெட் ....2 டெம்ப்ரரி dc மாக்னெட் .....3 ac துடிப்பு உள்ள மாக்னெட் ....ஸ்பீக்கரில் இரண்டு வகை பயன் படுத்த படுகிறது 1 பர்மனன்ட் மாக்னெட் 2 துடிப்பு உள்ள மாக்னெட்
உருவாக்க இங்கு வாய்ஸ் காயில் பயன் படுகிறது ஆம் மைக் முன்பு நாம் பேசும் பேச்சோ அல்லது இசைக்கருவியோ அதில் இருந்து வெளியாகும் அதிர்வுஅலைகள் ஆம்ப்ளிபாயர் மூலம்
விரிவாக்க பட்டு வாய்ஸ் காயிலுக்கு கொடுக்க படுகிறது இந்த வாய்ஸ் காயில் பர்மனன்ட் மாக்னெட் மற்றும் ஒரு இரும்பு துண்டுக்கு இடையே மிதக்கும் வகையில் அமைக்க பட்டு இருக்கும்
உருவாக்க பட்ட அதிர்வு அலைகள் காயிலுக்குள்சென்று அதிர்வுகளுக்கு தக்கவாறு துடிப்புள்ள காந்தமாக மாறும்போது
வாய்ஸ்காயில் காந்தவிதிக்கு ஏற்றார் போல் முன்னும் பின்னும் அசைகிறது வாய்ஸ்காயிலை அளவுக்கு மீறி அசைக்காமல் இருக்க இங்கு ஸ்பைடர் நெட் இங்கு பயன் படுகிறது அதன் முன்புறம் உள்ள கோன் வடிவ டயபரம் அதிர்வு ஒலிக்கு தக்கவாறு அதிர்கிறது இந்த அதிர்வுகள் காற்றில் பரவி நம் காதுகளை வந்து அடைகிறது
நம் காதுகள் 2 0 துடிப்பு முதல் 20,000துடிப்புகள் வரை ஏற்றுகொள்ளும் இதனை 2 0 ஹெர்ட்ஸ் முதல் 20கிலோ
ஹெர்ட்ஸ் என்பார்கள் ஒவ்வொரு குழுஅலை துடிப்புக்கும் தக்க வாறு ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைகின்றன அவற்றில் 1 வூபர்,
2மிட்ரேஞ் 3 ட்வீட்டர் வூபர் மூலம் ட்ரம்ஸ் மேல தாளங்கள்
போன்றவை மிட்ரேஞ் இல் பேச்சு பாடல்வரிகள் கேட்கலாம்
ட்வீட்டர் இல் அதிக துடிப்புள்ள மணியோசை சில் சில் எனும் இசை ஒலியலைகள் கேட்கலாம்
ஆசிரியர் லி பூபதிராஜ் முன்னாள் ராணுவம்
MAHA HI-TECH(india)
ELECTRONICS
10 ANNA STREET
N.PUTHUR
KARAIKUDI 63001